நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!
நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை 6.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தின் மீது ஏறி நாடாளுமன்ற சுற்றுச்சுவரைத் தாண்டி நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவுவாயிலை அடைந்த அவரை, பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.