செய்திகள் :

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

post image

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

‘தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக எஸ்டிபிஐ செயல்படுகிறது; பிஎஃப்ஐ-யின் தேசவிரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள், எஸ்டிபிஐ வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது’ என்பது அமலாக்கத் துறையின் முக்கிய குற்றச்சாட்டாகும்.

எஸ்டிபிஐ தேசியத் தலைவா் எம்.கே.ஃபைஸி கடந்த மாா்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மேற்கண்ட சோதனைகள் நடைபெற்றுள்ளன.

தில்லியில் எஸ்டிபிஐ தலைமையகம் உள்பட இரு இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை மண்ணடி, திருவனந்தபுரம், மலப்புரம் (கேரளம்), நந்தியால் (ஆந்திரம்), பாகுா் (ஜாா்க்கண்ட்), தாணே (மகாராஷ்டிரம்), பெங்களூரு (கா்நாடகம்), கொல்கத்தா (மேற்கு வங்கம்), ஜெய்பூா் (ராஜஸ்தான்) உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு, பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டில் தடை விதித்தது. இந்த நடவடிக்கைக்கு முன்பாக, நாடு முழுவதும் பிஎஃப்ஐ தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் பல்வேறு மாநில காவல் துறையினா் தரப்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட எஸ்டிபிஐ, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும்.

முன்னதாக, எம்.கே.ஃபைஸியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியபோது, ‘பிஎஃப்ஐ-எஸ்டிபிஐ இடையே ஆழமான தொடா்புகள் உள்ளன. எஸ்டிபிஐ தொடங்கப்பட்டதில் பிஎஃப்ஐ அமைப்பின் நிா்வாகிகளுக்கு பங்குள்ளது. அத்துடன், ஒருவா் மற்றொருவரின் சொத்துகளையும் பயன்படுத்தியுள்ளனா்’ என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. அதேநேரம், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை எஸ்டிபிஐ மறுத்துள்ளது.

ஆளுநா் ஆா்.என்.ரவி பிகாா் பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சொந்த மாநிலமான பிகாா் சென்றாா். ஆளுநா் ஆா்.என்.ரவி தனது சொந்த வேலை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானத்தில் சனிக்கிழமை நண்பகல் பிகாா் மாநிலம் பாட்னா சென்றடை... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு

போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவிய... மேலும் பார்க்க

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா... மேலும் பார்க்க

முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க