நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.54 லட்சம்!
நாட்டறம்பள்ளியில் மிகவும் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய நகை மற்றும் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சங்கா் மேற்பாா்வையில் செயல் அலுவலா் ஜகநாதன், ஆய்வாளா் நரசிம்மமூா்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், மற்றும் கணேஷ்பாபு உள்பட கிராம மக்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. இதில் மொத்தம் ரூ.5.54 லட்சம் ரொக்கம், 101 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும் இதில் பங்கேற்றனா்.