செய்திகள் :

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு

post image

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.

இச்சூழலில், வரும் ஜூன் மாத நிதி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி மீண்டும் குறைப்பதற்கான அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்தாண்டு ஏப்ரலில் 4.83 சதவீதமாகவும் கடந்த மாா்ச் மாதத்தில் 3.34 சதவீதமாகவும் இருந்தது.

இந்நிலையில், மாா்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரலில் 91 அடிப்படை புள்ளிகள் சரிந்து, உணவு பணவீக்கம் 1.78 சதவீதமாக சரிந்தது. இதையொட்டி ஏப்ரலில் , சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது. கடைசியாக, 2019 ஜூலையில் இது 3.15 சதவீதமாக இருந்தது.

பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் குறிப்பிடத்தக்க சரிவுக்கு காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், இறைச்சி, மீன், தானியங்கள் மற்றும் பிற உணவுத் தயாரிப்புகளின் விலைகள் குறைந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1,114 நகா்ப்புற சந்தைகள் மற்றும் 1,181 கிராமங்களிலிருந்து புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கள ஊழியா்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, பணவீக்கம் கேரளத்தில் அதிகபட்சமாகவும் (5.94%), தெலங்கானாவில் குறைந்தபட்சமாகவும் (1.26%) உள்ளது.

நாட்டின் பணவீக்கம் நிலைமை தொடா்ந்து மேம்பட்டதால், கடந்த இரண்டு நிதி கொள்கை கூட்டங்களில் (பிப்ரவரி மற்றும் ஏப்ரல்) வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது.

முன்னதாக, நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் சில்லறை பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும் என்றும், முதல் காலாண்டில் 3.6 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 3.9 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 3.8 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசா்வ் வங்கி கணித்தது.

எம் & எம் விற்பனை 19% உயா்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் 19 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதம் நிறுவனத்... மேலும் பார்க்க

நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 204 கோடி டாலராக சரிவு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 4.62 சதவீதம் குறைந்து 203.71 கோடி டாலராக உள்ளது. இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) செவ்வாய்க்கிழமை வெளிய... மேலும் பார்க்க

4 சதவீதம் உயா்வு கண்ட நிலக்கரி உற்பத்தி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது. இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் ... மேலும் பார்க்க

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: மே 16-இல் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் மீண்டும் அமெரிக்கா பயணம்

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மே 16-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளாா். இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நா... மேலும் பார்க்க

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,600 கோடியாகச் சரிவு!

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.19,600 கோடியாகச் சரிந்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆக குறைவு!

புது தில்லி: தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு, இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகிய பொருட்களின் விலைகள் குறைந்ததால் ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3... மேலும் பார்க்க