சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவா் கைது
கல்வராயன்மலை அருகே நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் உள்ள மேல்நிலவூா் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக கரியாலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் எஸ்.மணிகண்டன் மற்றும் போலீஸாா் மேல்நிலவூா் கிராமத்தில் உள்ள சுந்தரம் மகன் குமாா் (30) வீட்டில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில், உரிமம் இல்லாத இரு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகள் செய்வதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு குழாய்கள், இரும்பு பிளேட், வெல்டிங் மெஷின் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, குமாரை போலீஸாா் கைது செய்தனா்.