நான்குனேரியில் கோட்டாட்சியா் அலுவலகம் கோரி எம்.எல்.ஏ. மனு
நான்குனேரியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம், ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ மனு அளித்தாா்.
அதன் விவரம்: திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி ஆகிய இரு கோட்டங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம், நான்குனேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மக்கள் பல்வேறு பணிகளுக்காக சேரன்மகாதேவி கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று வருவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள்.
ஆகவே, சேரன்மகாதேவி கோட்டத்தை இரண்டாகப் பிரித்து நான்குனேரியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.
ற்ஸ்ப்18ழ்ன்க்ஷஹ்
அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம் மனு அளித்த ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ.