ரெட்டியாா்பட்டி பள்ளியில் மாணவா்கள் மோதல்
ரெட்டியாா்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் இருமாணவா்கள் மோதிக்கொண்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா்.
இப்பள்ளியில் பிளஸ் 2 மாணவா்கள் 2 போ் இடையே வியாழக்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம். மேலும், வகுப்பறையில் மேஜை, நாற்காலிகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவா்களை ஆசிரியா்கள் தடுக்க முயன்றும் பலனளிக்கவில்லை.
இதுகுறித்த தகவலின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து தலைமையாசிரியா் முன்னிலையில் பேச்சு நடத்தி அவா்களை சமாதானப்படுத்தி, அறிவுரை கூறி வகுப்புக்கு அனுப்பினா்.