பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை
பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பெருமாள்புரம் அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்த வானுமாமலை மகன் கருப்பசாமி மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவி உள்ளாா். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக வியாழக்கிழமை திடீரென கருப்பசாமி மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டுக்கொண்டாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.