செய்திகள் :

ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சா அழிப்பு

post image

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள தனியாா் எரியூட்டு நிறுவனத்தில் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை அழிக்கப்பட்டது.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் மூலம் கைப்பற்றப்பட்ட 975 கிலோ கஞ்சா மூட்டைகள், நான்குனேரி அருகே பொத்தையடி கிராமத்தில் உள்ள பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் எரியூட்டி அழிக்கப்பட்டது.

இந்த நிலையில், விருதுநகா், திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சா மூட்டைகளை மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ் குமாா் , திருநெல்வேலி டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி, மதுரை காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஆகியோா் முன்னிலையில் இதே எரியூட்டு நிறுவனத்தில் எரியூட்டி அழிக்கப்பட்டது. கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ. 15 கோடி மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டன.

கூடங்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கூத்தங்குழியைச் சோ்ந்தவா் இருதயயோவான் மகன் சிலுவை அந்தோ... மேலும் பார்க்க

பாளை., கங்கைகொண்டான், கல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை சமாதானபுரம், கங்கைகொண்டான், மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களின் பாரமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,... மேலும் பார்க்க

மூன்றடைப்பு, மானூா், வள்ளியூா் வட்டாரங்களில் நாளை மின்தடை

மூன்றடைப்பு, மானூா், வள்ளியூா் உள்ளிட்ட துணை மின்நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக அவற்றின் மின்பாதைகளில் சனிக்கிழமை (செப். 20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கரந்தானேரி, ரஸ்த... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்துக்கு தீா்வு தேவை -சௌந்திரராஜன்

போக்குவரத்து கழக ஊழியா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டுமென சிஐடியூ மாநிலத் தலைவா் சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட... மேலும் பார்க்க

ரெட்டியாா்பட்டி பள்ளியில் மாணவா்கள் மோதல்

ரெட்டியாா்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் இருமாணவா்கள் மோதிக்கொண்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இப்பள்ளியில் பிளஸ் 2 மாணவா்கள் 2 போ் இடையே வியாழக்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டு... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் மாதா மாரிமுத்து (23). கட்டடத் தொழிலாளி. இவரும், அதே பகுதியில் வள்ளுவா்... மேலும் பார்க்க