மனநல நிறுவனங்கள் பதிவுக்கு ஒரு மாதம் அவகாசம்: ஆட்சியா்
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதைப் பயன்பாட்டிற்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள்செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அல்லது ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்ஞ்ா்ஸ்ண்ய்/க்ம்ங்/க்ம்ங்.ல்ட்ல் என்ற இணையதளம் மூலமோ விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-2642 0965 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். ஒரு மாதத்துக்குள் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத மனநல நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.