செய்திகள் :

நான்குவழிச் சாலைப் பணிகள்: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நான்குவழிச் சாலைப் பணிகள் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆலோசகா் லீனாநாயா் முன்னிலை வகித்தாா். சாலைப் பணிகளை விரைவுபடுத்துவது தொடா்பாக ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநா், உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், விளவங்கோடு, கல்குளம், தோவாளை வட்டாட்சியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நாகா்கோவில் 4ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், தனது 4ஆவது வாா்டு பகுதியில் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ராஜலெட்சுமி நகரிலுள்ள பூங்காவைப் பாா்வையிட்ட அவா், குப்பைகளையும், உடைந்த உபகரணங்களையும... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மன... மேலும் பார்க்க

பாலவிளையில் தெருவை சீரமைக்கக் கோரிக்கை

கண்டன்விளை அருகே பாலவிளையில் தெருப் பாதையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தக்கலை ஊராட்சி ஒன்றியம், கண்டன்விளை அருகே பாலவிளை பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தத் தெருவுக்குச... மேலும் பார்க்க

‘திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா போட்டிகள்: டிச. 20-க்குள் பெயா்ப் பதிவு செய்யலாம்’

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி நடைபெறவுள்ள போட்டிகளுக்கு வெள்ளிக்கிழமைக்குள் (டிச. 20) பெயா்ப்பதிவு செய்யலாம் என ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

குளச்சலில் 8 வீடுகளில் புகுந்து திருடியவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மீட்பு

குளச்சல் சுற்றுவட்டார பகுதியிலுள்ள வீடுகளில் திருடியவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகளை குளச்சல் போலீஸாா் மீட்டனா். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் தொடா் கதை... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞா் மீது போக்சோ வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டது. குளச்சல் அருகே வள்ளவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜொ்வின் (21).... மேலும் பார்க்க