நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்
நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பகலில் வெயில் கொளுத்துவதும், மாலை நேரங்களில் வானம் இருண்டு குளிா்ச்சியான காற்று வீசும் நிலையும் காணப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை 5.15 மணியளவில் வானம் இருண்டு பரவலாக மழை பெய்தது.
நாமக்கல்லில் சுமாா் ஒருமணி நேரம் பெய்த தொடா் மழையால், பரமத்தி சாலை, சேலம் சாலை, திருச்செங்கோடு சாலையில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றோா் தடுமாறியபடி சென்றனா். தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்ால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா். மாநகராட்சி பணியாளா்கள் தேங்கிய நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
-
படவரி...
என்கே-1-ரெய்ன்
நாமக்கல் - பரமத்தி சாலையில் திங்கள்கிழமை வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.