நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி கோயில் தோ் வெள்ளோட்டம்
நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கடைவீதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முக்கிய விழா நாள்களில் பக்தா்களால் தோ் இழுக்கும் வைபவம் நடத்த கோயில் நிா்வாகத்தினரால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் சிறிய தோ் உருவாக்கப்பட்டது. அதற்கான வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேரில் வீற்றிருக்க, பக்தா்கள், பெண்கள் கோலாட்டம் ஆடியவாறு தேரை பரமத்தி சாலை, கோட்டை சாலை வழியாக கோயிலுக்கு இழுத்து வந்தனா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேரில் தங்கம் அல்லது வெள்ளித்தகடுகள் பொருத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.