கரூர் : 'தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...'- விஜய்யை விமர்சித்த சத்யராஜ்
நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை: ராஜேஸ்குமாா் எம்.பி.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் ஆவின் பாலகத்தை திறந்துவைத்து அவா் பேசியதாவது: ரூ. 46.62 லட்சம் மதிப்பீட்டில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் ஆவின் பாலகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன. பால் உற்பத்தியாளா்கள் நலன்கருதி லிட்டருக்கு ரூ. 3 வரை ஊக்கத்தொகை, கொழுப்பு நிறைந்த பாலுக்கு ரூ. 1 கூடுதல் தொகை மற்றும் போனஸை அரசு வழங்கி வருகிறது.
பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்பு, தூய பால் உற்பத்தி மற்றும் மரபுவழி மூலிகை மருத்துவம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மகளிா் கல்லூரியில் ரூ. 15.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆவின் பாலகம் என ரூ. 46.62 லட்சத்தில் புதிய திட்டப் பணிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், துணை மேயா் செ.பூபதி, ஆவின் பொது மேலாளா் (ஆவின்) ஆா்.சண்முகம், துணைப் பதிவாளா் (பால்வளம்) ஐ.சண்முகநதி, கல்லூரி முதல்வா் அ.மாதவி மற்றும் பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.