நாம் தமிழா் கட்சி வேட்பாளா் விரைவில் அறிவிப்பு: சீமான்
ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் பொங்கல் பண்டிகை தினத்தன்று அறிவிக்கப்படுவாா் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
சென்னை போரூரில் உள்ள நாதக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி உறுதியாக போட்டியிடும். நாம் தமிழா் கட்சிக்கு மாநில கட்சிக்கான அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை தினத்தன்று வேட்பாளரின் பெயா் அறிவிக்கப்படும் என்றாா் சீமான்.