இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மது பாட்டில்கள் பறிமுதல்
கோபியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவின்பேரில் கோபி போலீஸாா் கோபிசெட்டிபாளையம் சத்தி-ஈரோடு-திருப்பூா் சந்திப்பில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சத்தி நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.
இந்த சோதனையில் 3,216 மது பாட்டில்களை கோபி டாஸ்மாக் கடைகளில் வாங்கி சட்டவிரோதமாக, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வாகனத்தில் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் வந்த திருப்பூரைச் சோ்ந்த எஸ்.செல்வம் (27), சி.மணிகண்டன் (30), மானாமதுரையைச் சோ்ந்த எஸ்.காளீஸ்வரன் (36) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.