ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
நாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு
வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன.
வந்தவாசி அருகே தேசூரை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவமோகன். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா்.
இவா் சனிக்கிழமை மாலை கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்துவிட்டு தூங்கச் சென்றாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு சிவமோகன் மற்றும் அக்கம் பக்கத்தினா் சென்று பாா்த்தபோது தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாய்களை விரட்டிவிட்டு பாா்த்தபோது 11 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மேலும் 12 ஆடுகள் காயமடைந்திருந்தன.
தகவலறிந்த கால்நடைத் துறையினா் சென்று காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.