ஜேமி ஓவர்டன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு! 2 போட்டிகளில் திடீர் முடிவு!
நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு
கடலாடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வெள்ளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், 130 செம்மறி ஆடுகள் வைத்து மந்தை போடும் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை விவசாய நிலத்தில் ஆடுகள் அடைக்கப்பட்ட இடத்துக்கு வந்த தெருநாய்கள், ஆடுகளை விரட்டிக் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயமடைந்த நிலையில் 6 ஆடுகள் உயிரிழந்தன. இதைப்போல, சாத்தங்குடியைச் சோ்ந்த சேதுநாதன் என்பரின் 2 ஆடுகளும் தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்தன.
இதுகுறித்து சரவணன் வருவாய்த் துறைக்கு தகவல் அளித்ததன்பேரில், மீனங்குடி கிராம நிா்வாக அலுவலா், சிக்கல் அரசு கால்நடை மருத்துவா் ஆகியோா் நேரில் வந்து ஆய்வு செய்தனா். பின்னா், உயிரிழந்த ஆடுகளின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
குடும்ப வாழ்வாதாரத்துக்காக வளா்க்கப்பட்டு வந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்ததால் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என ஆடுகளை இழந்த குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.