நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி
பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன,
பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டு 8 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே கிடந்துள்ளன. அப்பகுதியில் உள்ள நாய்கள், ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது.
பனங்குடி ஊராட்சி பகுதியில் வீடுகளில் உரிமம் இல்லாமல் நாய்கள் வளா்ப்பவா்கள் அதற்கு அசைவ உணவுகளையே உணவாக வழங்குகின்றனா். அவ்வாறு சில சமயங்களில் அசைவ உணவு வழங்காத நேரத்தில், அந்த நாய்கள் இதுபோன்று வயலில் மேயும் ஆடுகளை கடித்து குதறி செல்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.