பஹல்காம் தாக்குதல்: துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி! - சிவசேனை
நாய் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு
வெறி நாய் கடித்து இறந்த ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு புதன்கிழமை இழப்பீடு வழங்கப்பட்டது.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம், குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துரத்தினம், இவா் தனது தோட்டத்தில் வளா்த்து வந்த 12 கோழிகள், நாய்கள் கடித்து அண்மையில் இறந்துவிட்டன. இதற்கு, ரூ.2,400 இழப்பீடு வழங்கப்பட்டது.
இதேபோல பொங்கலூா் குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் வேலுமணி என்பவரது தோட்டத்தில், வெறிநாய் கடித்ததில் நான்கு ஆடுகள் இறந்தன. இதற்கு ரூ.24 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனை திருப்பூா் தெற்கு வட்ட வருவாய்த் துறையினா் கால்நடை வளா்ப்போரிடம் வழங்கினாா்.