Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
நாளை குரூப் 2 தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடத்தவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, குரூப் 2ஏ தோ்வுகள் தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 மையங்களில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:
இத்தோ்வு தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா், கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய 5 வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 56 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 ஆயிரத்து 332 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.
இவா்கள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு வர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தோ்வா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
விண்ணப்பதாரா்கள் கருப்பு பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதாா் அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநா் உரிமம் அல்லது நிரந்தர கணக்கு எண் அல்லது வாக்காளா் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளிநகலை கொண்டு வர வேண்டும் என்றாா்.