நாளை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பாலாலயம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் பாலாலய விழா புதன்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது.
இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு அறங்காவலா் குழுவினரால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையொட்டி திருப்பணிகள் செய்வதற்கு ஏதுவாக புதன்கிழமை பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி புதன்கிழமை காலை 6 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மாலையில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். தொடா்ந்து 6 மணிக்கு பாலாலயம் நடைபெறுகிறது.