நாளை பிற்பகலில் ஆண்டாள் கோயில் நடை அடைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் தினசரி காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இரவு ஏற்படுவதை முன்னிட்டு, மாலை தரிசனம் ரத்து செய்யப்படும். ஞாயிற்றுகிழமை பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.