செய்திகள் :

நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழை!

post image

தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (23-09-2025) காலை மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (24-09-2025) காலை 0830 மணி அளவில், வடக்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் - மேற்கு வங்க பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுகுறையக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

மத்திய மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 25- ஆம் தேதி வாக்கில் (நாளை), ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி கரையை கடக்கக்கூடும்.

செப். 24ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப். 25ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப். 26ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப். 27ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை..

செப். 24 முதல் 28 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2- 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

செப். 24ல் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The Meteorological Department has announced that there is a possibility of heavy rain in Tamil Nadu for 3 days starting tomorrow.

இதையும் படிக்க: பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்

அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம்: அமைச்சர் எ.வ. வேலு ஹைதராபாத்தில் ஆய்வு!

அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு எஃகு கட்டமைப்பு பணிகளை ஆந்திர மாநிலம், ஹைதராபாத் நகருக்கு நேரில் சென்... மேலும் பார்க்க

ஜாய் கிரிஸில்டா விவகாரம்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு காவல் துறை சம்மன்!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஏமாற்றியதாக ஜாய் கிறிஸில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராககும்படி நீலாங்கரை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்... மேலும் பார்க்க

மிளகாய்ப் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தல்: 2 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்!

குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி 4 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில், தனிப்படைக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் அந்தச் சிறுவனை மீட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம் குடியாத... மேலும் பார்க்க

கவின் கொலை விவகாரம்: சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

கவின் கொலை விவகாரத்தில், காதலைக் கைவிடுமாறு கவின் மிரட்டப்பட்டார் என்று விசாரணையின்போது சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.மாற்றுச் சமூகத்து பெண்ணை காதலித்தற்காக கவின் செல்வகணேஷ் நெல்லைய... மேலும் பார்க்க

வேலூரில் தந்தை மீது மிளகாய் பொடி தூவி 4 வயது குழந்தை கடத்தல்!

வேலூர்: வெலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தந்தை மீது மிளகாய் பொடி தூவிவிட்டு, அவரிடமிருந்த 4 வயது குழந்தையை கடத்தல்காரர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பள்ளி சென்றுவிட்டு... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, இதுவரை விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங... மேலும் பார்க்க