பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
நாளை மொடச்சூா் சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
கோபி அருகே மொடச்சூா் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சௌந்திரநாயகி சமேத சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவானது கடந்த 7 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் மகா கணபதி ஹோமம் பிரம்மச்சாரி பூஜை, தீபாராதனை, நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, சம்ஹிதா ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதில் முக்கிய நிகழ்வான விநாயகா் மற்றும் சோமேஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி தீா்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தீா்த்தக்குடம் எடுத்தனா்.
இந்த நிகழ்வைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை வரை தொடா்ந்து யாக பூஜைகள் நடைபெற உள்ளன. திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 7.30 சௌந்திரநாயகி சமேத சோமேஸ்வரா் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.