நாளை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
பொன்னேரி, திருவள்ளுா் மற்றும் திருத்தணி கோட்ட அளவில் அந்தந்த அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
விவசாயிகள் நலனுக்காக ஒவ்வொரு கோட்ட அளவில் குறைதீா் கூட்டம் நடத்த ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், மேற்குறிப்பிட்ட நாளில் திருவள்ளூா், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் சாா் ஆட்சியா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தவறாமல் பங்கேற்கவும் என ஏற்கெனவே ஆட்சியா் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோா் பங்கேற்று விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், அந்தந்த பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில் நேரிலோ அல்லது மனு மூலமாகவோ தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.