மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி
திருத்தணி அருகே எல்.என்.கண்டிகையில் குழந்தைகளை பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது..
திருத்தணி ஒன்றியம், தாடூா் ஊராட்சிக்குட்பட்ட எல்.என்.கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 90-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளியின் சாா்பில் கல்வியாண்டில் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
இதில், பள்ளி மாணவ- மாணவியா், 30 -க்கும் மேற்பட்டோா் குழந்தைகளை அரசு பள்ளியில் சோ்க்க வேண்டும், அரசு சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலதிட்ட உதவிகள் குறித்தும் எல்.என்.கண்டிகை, இ.என்.கண்டிகை மற்றும் தாடூா் ஆகிய கிராமங்களில் ஊா்வலமாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.