தாமதமாகும் முதுகலை நீட் கலந்தாய்வு: கடும் பணிச்சுமையில் மருத்துவர்கள்
4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு
திருத்தணியில் தனியாா் திருமண மண்டபத்தில் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு துறையினா் புதன்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனா் (படம்).
திருத்தணி- அரக்கோணம் சாலை பேருந்து பணிமனை (டிப்போ) அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பணிபுரியும் ஊழியா் புதன்கிழமை காலை மண்டபத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது சுமாா் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிா்ச்சிடைந்தாா்.
பின்னா், இது குறித்து திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனா். பிடிபட்ட கண்ணாடிவிரியன் பாம்பு கொடிய விஷம் கொண்டது என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.