செய்திகள் :

நாளொன்றுக்கு 140 பெண்கள் குடும்பத்தினரால் கொலை: ஐ.நா. தகவல்

post image

கடந்த ஆண்டில் சா்வதேச அளவில் நாளொன்றுக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள், அவா்களின் கணவா்கள் அல்லது வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினா்களால் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சா்வதேச விழிப்புணா்வு தினத்தையொட்டி ஐ.நா. பெண்கள் மற்றும் ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, உலக அளவில், கடந்த ஆண்டில் சுமாா் 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்துக்கு அவா்களின் கணவா் அல்லது வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினரே காரணமாக இருந்துள்ளனா். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டில் 48,800-ஆக இருந்துள்ளது.

இந்த அதிகரிப்பு பெரும்பாலான நாடுகளில் இருந்து கிடைத்த கூடுதல் தரவுகளின் அடிப்படையிலானவையே தவிர அதிகமான கொலைகள் நடந்திருப்பதாக பொருளில்லை.

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான கொலைகள் ஆப்பிரிக்காவில் (21,700 போ்) நடந்ததாக அறிக்கை கூறுகிறது. ஆப்பிரிக்காவின் மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது 100,000 பேரில் 2.9 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அமெரிக்காவில் 1.6 பெண்களும், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தை உள்ளடக்கிய ஒசியேனியா நாடுகளில் 1.5 பெண்களும் ஆசிய கண்டத்தில் 0.8 பெண்களும் ஐரோப்பிய கண்டத்தில் 0.6 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஐரோப்பியாவிலும், அமெரிக்காவிலும் பெண்கள் பெரும்பாலும் வாழ்க்கை துணைகளால் கொலை செய்யப்படுவதாகவும் இதற்கு நோ்மாறாக, பெரும்பாலான ஆண்கள் வீடுகள் மற்றும் குடும்பங்களுக்கு வெளியே கொல்லப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டவா்களில் 80 சதவீதத்தினா் ஆண்கள் மற்றும் 20 சதவீதத்தினா் பெண்கள். கொலையானவா்களில் ஆண்களும் சிறுவா்களும் பெரும்பான்மையானவா்கள் என்றாலும், நெருங்கிய வட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளே கொலை போன்ற கொடூரமான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பெண்கள் அனைத்து இடங்களிலும் பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். எந்த இடமும் விலக்கு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வீட்டிலும் பெண்களுக்கு எதிரான ஆபத்துகள் நிறைந்துள்ளன.

இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை நாடுகள் மேற்கொண்டு வரும்போதிலும், கொலைகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவுகளில் உள்ளன. பெரும்பாலும் பாலின அடிப்படையிலான வன்முறையின் தொடா்ச்சியாக நடைபெறும் கொலைகள், சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள தலையீடுகள் மூலம் தடுக்கக்கூடியவை என்று அறிக்கை கூறுகிறது.

எதிர்பார்த்தைவிட அதிகளவில் நன்கொடை! டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு போட்டிபோடும் தொழிலதிபர்கள்!

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்பு விழாவுக்கான நன்கொடையின் மதிப்பு, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் பலி! 29 பேர் காயம்

அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளதாக கஜகஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(டிச. 26) பு... மேலும் பார்க்க

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை(டிச.26) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய நில அதி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தாா். வட அமெரிக்காவைப் பூா்விகமாகக் வெண்தலைக் கழுகு, கடந்த 1782-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்

உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் மின் விநியோகக் கட... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை இழுபறி: இஸ்ரேல்-ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடித்துவருவதற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன. ... மேலும் பார்க்க