10 முதல்வர்களை உருவாக்கிய நான், இப்போது உழைப்பது முதல்வர் பதவிக்காக அல்ல: பிரசாந...
நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரான இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோட்டூா் அருகே உள்ள மேலப்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி மன்னாா்குடி பகுதியில் உள்ள தனியாா் நா்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரது உறவினரான ராகவனும், மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி மாணவிக்கு ராகவன் பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து மாணவியின் தாயாா் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் ராகவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.