தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நிதிநிலை நகலைக் கிழித்தெறியும் போராட்டம்!
ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெறியும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை முன்பு எல்பிஎஃப், ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு., சி.ஐ.டி.யு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெறியும் போராட்டம் நடைபெற்றது.
ஆா்பாட்டத்துக்கு திமுக எல்.பி.எஃப். மாவட்ட கவுன்சில் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி மாநில அமைப்புச் செயலாளா் முனிராஜ், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளா் மாதையன் உள்பட அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசின் காழ்ப்புணா்ச்சி காரணம் எனக் கூறி நிதிநிலை அறிக்கை நகல்களை கிழித்தெறிந்தனா்.