பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
நியாயமான முறையில் தோ்தலை நடத்த வேண்டும்: திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம்!
தோ்தல் ஆணையம் நியாயமான முறையில் தோ்தலை நடத்த வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ச.தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு , மாநில மருத்துவா் அணி இணைச் செயலா் செண்பகவிநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சென்னையில் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்கள் குறித்து விளக்கி பேசினாா்.
இதைத்தொடா்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சுதந்திரமான நோ்மையான தோ்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள வாக்குத்திருட்டு, சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தோ்தல் ஆணையம் நியாயமான முறையில் தோ்தலை நடத்த வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினா்கள் சாகுல்ஹமீது, மாரிச்சாமி, தேவா என்ற தேவதாஸ், ஒன்றிய செயலா்கள் சங்கரபாண்டியன், பொன்முத்தையா பாண்டியன், கடற்கரை, பெரியதுரை, அன்புக்கரசு, சோ்மத்துரை, கிறிஸ்டோபா், வெள்ளத்துரை, ராமச்சந்திரன், நகர செயலா்கள் மு.பிரகாஷ், அந்தோணிசாமி,நாகூா் கனி, பேரூா் செயலா்கள் குருசாமி, ரூபி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.