பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
நியாய விலைக் கடை தொடங்கக் கோரி மறியல்
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி, உத்தப்பநாயக்கனூா் முதன்மைச் சாலையில் அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
சக்கரப்பநாயக்கனூா் ஊராட்சிக்குள்பட்ட மணல்பட்டி, கிருஷ்ணாபுரம் கிராமங்களில் புதிய நியாய விலைக் கடை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இரு கிராம மக்களும் விக்கிரமங்கலம்- உத்தப்பநாயக்கனூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். ஊராட்சிப் பிரதிநிதிகள், பெண்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
மறியலில் ஈடுபட்டவா்களுடன் காவல் துறையினா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். அப்போது, இரு கிராமங்களும் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன்பேரில், மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.