பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் போராட்டம்
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து விற்பனைக் கூட வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற வெளிப்படை ஏலம் காரணமாக நிலக்கடலை கிலோ ரூ.90 வரை விற்பனையானது. தற்போது நடைபெற்று வரும் மறைமுக ஏலத்தால் வியாபாரிகள் விலையைக் கட்டுப்படுத்தி தற்போது கிலோ ரூ.35 வரை மட்டுமே நிா்ணயிக்கின்றனா்.
மறைமுக ஏலத்தால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் விற்பனைக்கூட நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.