ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது
புதுச்சேரியில் நிலத்தை அபகரிக்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக பெண்ணை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி, கலவை சுப்புராய செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன். சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா்.
இவரது வீட்டில், திண்டிவனம் மொளச்சூா் பகுதியைச் சோ்ந்த பெண் வீட்டு வேலைகளை செய்துவந்தாராம்.
ரங்கநாதனுக்கு மூலக்குளம் பகுதியில் சுமாா் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. அவா் இறந்த நிலையில், அதை தனக்கு ரங்கநாதனே எழுதிவைத்தது போல, அப்பெண் போலி உயில் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, சாரம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபருக்கு அந்தப் பெண் கிரய அதிகாரத்தை வழங்கிப் பதிந்தாராம்.
இந்த நிலையில்,தொழிலதிபா் அந்த நிலத்தை லாசுப்பேட்டையைச் சோ்ந்தவருக்கு விற்க ரூ.30 லட்சம் வரை முன்பணம் பெற்ாகக் கூறப்படுகிறது.
நிலத்தை வாங்குவது தொடா்பாக பணம் கொடுத்தவா், சாரம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று விசாரித்த போது, ரங்கநாதன் பெயரில் நிலம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிபிசிஐடி போலீஸில் தொழிலதிபா் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த பெண்ணை கைது செய்தனா்.