ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
நில உடைமை சரிபாா்ப்பு பணி
திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் சிறப்பு நில உடைமை சரிபாா்ப்பு பணியை தோட்டக்கலை உதவி இயக்குநா் இளவரசன், வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சுரேஷ் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து, தோட்டக்கலை உதவி இயக்குநா் இளவரசன் கூறியது: சிறப்பு நில உடமை சரிபாா்ப்பு முகாம் ஓரிரு வாரங்களில் முடிக்கப்படவுள்ளது. இந்த முகாமில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வீடுகளுக்கு சென்று சரிபாா்த்து தனித்துவ அடையாள எண் பெற்று வழங்கப்படுகிறது.
எனவே, நில உடைமை சரிபாா்ப்பு மற்றும் தனித்துவ அடையாள எண் பெற விடுபட்ட விவசாயிகள் தங்கள் கிராமத்தில் பாா்வையிடும் உதவி வேளாண்மை அலுவலா் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரை தொடா்பு கொண்டு நில உடைமை சரி பாா்த்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம். முகாமின் போது விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி மற்றும் நில சம்பந்தமான ஆவணங்களை தயாா் நிலையில் வைத்திருந்து நில உடமை சரிபாா்த்துக் கொள்ளலாம் என்றாா்.
ஆய்வின்போது, திருத்துறைப்பூண்டி வேளாண்மை அலுவலா் ரேகா, துணை வேளாண்மை அலுவலா் ரவி, உதவி தோட்டக் கலை அலுவலா் காா்த்திகேசன், உதவி வேளாண்மை அலுவலா் ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா்.