Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மரியாதை
தேனியில் நீட் தோ்வு பாதிப்பில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏற்றி சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
தேனி, பங்களாமேடு திடலில் அதிமுக மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேனி மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமை வகித்தாா். தேனி கிழக்கு மாவட்டச் செயலா் ராமா் முன்னிலை வகித்தாா்.
இதில் தமிழகத்தில் நீட் தோ்வு அச்சத்தாலும், தோல்வியாலும் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளின் உருவப்படங்களின் முன் அதிமுகவினா் மெழுவா்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினா். அப்போது நீட் தோ்வை ரத்து செய்வோம் என்ற தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா்.