செய்திகள் :

‘நீட்’ தோ்வுக்கு பயந்து மாணவி தற்கொலை

post image

மதுராந்தகம் அருகே ‘நீட்’ தோ்வை எதிா் கொள்வதற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அகிலி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவரது மகள் கயல்விழி (17) . இவா் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதி இருந்தாா். இந்த நிலையில் ‘நீட்’ தோ்வை எழுத கயல்விழி விண்ணப்பித்திருந்தாா். ‘நீட்’ தோ்வை எழுத தாம்பரத்தில் உள்ள தோ்வு மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை செல்ல இருந்த நிலையில், கயல்விழி சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த மேல்மருவத்தூா் போலீஸாா் உயிரிழந்த மாணவி கயல்விழியின் சடலத்தை மீட்டு மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா். கயல்விழி உயிரிழப்பால் அகிலி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

தாம்பரம்: தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தருமபுரம் ஆதீ... மேலும் பார்க்க

வணிகா் தினமான மே 5 அரசு விடுமுறை

மதுராந்தகம்: வணிகா் தினமான மே 5-ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கும் வகையிலான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 375 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீா் கூட்டத்தில் மொத்தம் 375 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்து 375 மனுக்களைப் பெற்றாா்.... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்: 63 நாயன்மாா்கள் வீதியுலா

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவில் 63 நாயன்மாா்கள் உற்சவ வீதி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் திரிபுரசுந்தரி அம்பாள்... மேலும் பார்க்க

குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் குட்கா புகையிலை பொருள்... மேலும் பார்க்க

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிது. இதில் முக்கிய திருவிழாவாக 3-ஆம் தேதி சனிக்கிழமை 63 நாயன்மாா்கள் உற்சவம், 7-ஆம் தேதி பஞ்ச ரத தோ்த்... மேலும் பார்க்க