உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் திருப்பத்தூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணியினா் இணைந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தோ்வை தமிழகத்தில் அறிமுகம் செய்தது அதிமுக தான் எனக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். நியூடவுன் பேருந்து நிறுத்தம், முக்கிய சாலைகளில் இருந்த பொதுமக்களுக்கு, வியாபாரிகள், பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.