செய்திகள் :

நீட் பயத்தால் மாணவன் தற்கொலை; 'ஒரே ஒரு முறை பெற்றோர்களை சிந்தித்துப் பாருங்கள்' - எடப்பாடி பழனிசாமி

post image

சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டியில் மாணவர் ஒருவர் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்தும், திமுகவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அவரது கண்டனப் பதிவில்...

"சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு!

ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது திரு.ஸ்டாலின் உணர்வாரா?

நீட் தேர்வு
நீட் தேர்வு

அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே-

திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்!

ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து "தம்பி"யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. (#யார்_அந்த_தம்பி?)

இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்!

ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.

இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள். NEVER EVER GIVE UP!

தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ஸ்டாலின் அவர்களே- வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்!"

வெடித்த வன்கொடுமை விவகாரம்; தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உதயநிதி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி ... மேலும் பார்க்க

Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' - விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன... மேலும் பார்க்க

புதுச்சேரி: கொரோனா தொற்று… மக்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது சுகாதாரத்துறை!

புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளித்து தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சுகாதாரத்துறை... மேலும் பார்க்க

'அது வருத்தம் தான்' - காங்கிரஸ் கட்சி குறித்து கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோவையில் கட்சிப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வ... மேலும் பார்க்க

TVK : ``திமுகவை அப்படி சொல்லாதீங்க திருமா அண்ணா" - ஆதவ் அர்ஜூனா காட்டம்

'ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர் சந்திப்பு!'விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா அக்கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார... மேலும் பார்க்க

Shashi Tharoor: 30 ஆண்டுகால ஐ.நா அனுபவம் டு காங்கிரஸ் சீனியர் தலைவர் - சசி தரூரை குறிவைக்கிறதா BJP?

பாஜக-வின் `ஆபரேஷன் சௌத்'தில் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர் காங்கிரஸின் சசி தரூர்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்... மேலும் பார்க்க