போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க கோரி ஆா்ப்பாட்டம்
நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பான விவாதம் வந்தபோது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் எழுந்தது.
மத்தியில் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி ஆட்சி இருந்தபோதுதான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக அதனை நிறைவேற்றியதா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் விவகாரம் தொடர்பாக வாக்குறுதி கொடுத்தீர்களே.. என்று கேட்கிறீர்கள். அதனால்தான் சிக்கல் வந்தது என்கிறீர்கள். இப்போது, அந்த சிக்கலைத் தீர்த்து வைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என்று உங்களால் சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதை நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நிச்சயம் அதனை செய்திருப்போம். ஆனால், இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே.. இந்த நிபந்தனையைப் போட்டு அதை நிறைவேற்றினால்தான் கூட்டணி என அறிவிப்பீர்களா என்றுதான் கேட்கிறேன் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், 2026ஆம் ஆண்டில் என்ன, 2031ல் கூட கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது கூட்டணி அமைத்திருக்கிறீர்களே என்றும் இது ஏமாற்றுவேலையல்லவா என்றும் கேட்டுள்ளார்