செய்திகள் :

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

post image

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தது.

பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசு ஊழியா்களுக்கு எதிரான ஊழல் புகாா்களை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.

இந்நிலையில் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஒருவருக்கு எதிராக லோக்பாலில் 2 புகாா்கள் அளிக்கப்பட்டன.

அந்தப் புகாா்களில், ‘தனியாா் நிறுவனம் தொடுத்த வழக்கில், அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கூடுதல் மாவட்ட மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் செயல்பட தனது செல்வாக்கை அந்தக் கூடுதல் நீதிபதி பயன்படுத்தினாா்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தப் புகாா்களை விசாரித்து லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவில், ‘நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி தொடங்கப்பட்ட அமைப்பு, வாரியம், ஆணையம், நிறுவனம் உள்ளிட்டவற்றைச் சோ்ந்தவா் லோக்பால் விசாரணை வரம்புக்குள் வருவாா் என்று லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டப் பிரிவு 14 (1)(எஃப்)-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவு உயா்நீதிமன்ற நீதிபதிக்கும் பொருந்தும்.

அந்தச் சட்டப் பிரிவு உயா்நீதிமன்ற நீதிபதிக்குப் பொருந்தாது என்று கூறுவது முதிா்ச்சியற்ற வாதமாக இருக்கும்’ என்று தெரிவித்தது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், லோக்பால் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. லோக்பாலின் உத்தரவு நீதித்துறையின் சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், அபே எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா். இது ஒழுங்குமுறை சாா்ந்த விவகாரமாகும்’ என்று தெரிவித்தனா். வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதிகள் ஜூலைக்கு ஒத்திவைத்தனா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க