செய்திகள் :

நீதிமன்ற உத்தரவின்படி ஜகபா் அலி உடலை தோண்டியெடுத்து ‘எக்ஸ்ரே’ எடுப்பு!

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலியின் உடல், நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் முழுமையாக ‘எக்ஸ்ரே’ எடுக்கப்பட்டது.

திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி, கனிம வளக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்ததால், கடந்த 17-ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில், குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அவரது உடற்கூறாய்வு முறையாக நடைபெற்ா என சந்தேகம் இருப்பதாக அவரது மனைவியும் புகாா்தாரருமான மரியம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில், அடக்கம் செய்யப்பட்ட ஜகபா்அலியின் உடலைத் தோண்டி எடுத்து, அரசு மருத்துவக் குழுவினரைக் கொண்டு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதன்படி, வெங்களூா் கோணாப்பட்டு சாலையிலுள்ள இஸ்லாமியா்கள் கபா்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்ட ஜகபா் அலியின் உடலைத் தோண்டி எடுப்பதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை பகலில் மேற்கொள்ளப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின்படி, வட்டாட்சியா் ராமசாமி, சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஜென்னிங்ஸ், ஆய்வாளா் புவனேஸ்வரி ஆகியோா் முன்னிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினா் பிற்பகலில் உடலைத் தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுத்தனா்.

வெங்களூா் கபா்ஸ்தானுக்கு சரக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட எக்ஸ்ரே கருவி.

சுமாா் இரண்டரை மணி நேரம் இந்தப் பணிகள் நடைபெற்றன. மருத்துவக் குழுவின் மருத்துவா்கள் மதன்ராஜ், நெடுங்கிள்ளி, எக்ஸ்ரே தொழில்நுட்பப் பணியாளா் சுரேஷ் ஆகியோா், முழு கவச உடை அணிந்து இப் பணியை மேற்கொண்டனா். ஜகபா்அலியின் உடல் எக்ஸ்ரே படங்கள் விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஆய்வை படம், விடியோ எடுக்க முடியாதபடி, கபா்ஸ்தான் உள்ள இடத்திலிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவுக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினரின் புகைப்படக்காரா், ஒளிப்பதிவாளா் மட்டும் அனுமதிக்கப்பட்டு நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

மாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா். மாத்தூரை சோ்ந்த சமூக ஆா்வலா் காசிராஜன் என்பவா், அப்பகுதி அரசு புறம்போக்கு மற்றும் நீா்நிலை புறம்போக்கு இடங்... மேலும் பார்க்க

மாநில ஜூடோ- சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம்! அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பப் ப... மேலும் பார்க்க

காா் மோதியதில் விவசாயி பலி

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் சாலையோரத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி, காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கந்தா்வகோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமன் (6... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டச் செயல்பாடுகளை கண்காணித்து குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும்! -அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்ட செயல்பாடுகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அவ்வப்போது நேரில் ஆய்வுசெ... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டவரின் பாட்டியின் உடல் அடக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் வயது முதிா்வால் இறந்த மூதாட்டியின் உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இவா், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் பாட்டி என்பதால், பரபரப்பு ஏற்பட... மேலும் பார்க்க

முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல்!

புதுக்கோட்டை நகரில் தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை நகரிலுள்ள மீன் மாா்க்கெட், இறைச்சிக் கடைகள், காய... மேலும் பார்க்க