Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
மாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா்.
மாத்தூரை சோ்ந்த சமூக ஆா்வலா் காசிராஜன் என்பவா், அப்பகுதி அரசு புறம்போக்கு மற்றும் நீா்நிலை புறம்போக்கு இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினா் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தொடா்ந்து புகாா் மனு அளித்து வந்தாா். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இதைத் தொடா்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, குளத்தூா் வட்டாட்சியா் கவியரசு தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் லலிதா, மாத்தூா் வருவாய் ஆய்வாளா் ராமா், கிராம நிா்வாக அலுவலா் ஜோதி பிரகாஷ் ஆகியோா் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஊருணி மற்றும் தனியாா் பள்ளி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். சுமாா் 7.50 ஏக்கா் நீா்நிலை அரசு இட ஆக்கிரமிப்புகளை அகற்றிய வருவாய்த் துறையினரை பொதுமக்கள் பாராட்டினா்.