Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல்!
புதுக்கோட்டை நகரில் தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை நகரிலுள்ள மீன் மாா்க்கெட், இறைச்சிக் கடைகள், காய்கறிக் கடைகள், பூ மாா்க்கெட் பகுதிகளில் தொழிலாளா் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
திருச்சி தொழிலாளா் துறை உதவி இயக்குநா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையில், முத்திரை ஆய்வாளா்கள் பழனியம்மாள், குணசீலன், உதவி ஆய்வாளா்கள் பிச்சைமணி, ராஜாத்தி, நித்திய தா்ஷினி ஆகியோரைக் கொண்ட குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்,
மொத்தம் 45 கடைகளில் எடை அளவுகள் மறுமுத்திரையிடப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காய்கறி மாா்க்கெட் மற்றும் பூ மாா்க்கெட் பகுதிகளிலுள்ள 23 கடைகளில் முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
ஆண்டுக்கு ஒரு முறை அனைத்து எடை அளவீடு செய்யும் கருவிகளையும் மறுமுத்திரையிட்டுப் பயன்படுத்தாவிட்டால், பறிமுதல் செய்யப்படுவதுடன் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் வெ. தங்கராசு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.