Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
காா் மோதியதில் விவசாயி பலி
கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் சாலையோரத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி, காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமன் (68). இவா் வளா்த்து வரும் இரண்டு மாடுகளை தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆதனக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை மேய்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, புதுக்கோட்டை மிரட்டு நிலையைச் சோ்ந்த முருகேசன் (40 ), என்பவா் தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சாலை ஓரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ராமன் மற்றும் மாடுகள் மீது காா் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராமன் உயிரிழந்தாா். மாடுகளும் உயிரிழந்தன.
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த காரில் பயணித்த முருகேசன் மற்றும் குடும்பத்தினா் காயமடைந்தனா். தகவலறிந்து வந்த ஆதனக் கோட்டை போலீஸாா், ராமனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காயமடைந்தவா்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.