செய்திகள் :

நீதிமன்ற விசாரணைகளை அரசியலாக்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: நீதிமன்ற விசாரணைகளை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா்கள் என மொத்தம் 25,753 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நியமனங்கள் செல்லாது என்று கடந்த ஏப்ரலில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை விமா்சித்து அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி சில கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவரின் கருத்துகள் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் உரிமையைப் பாழாக்கும் வகையில் ஆட்சேபகரமாக இருந்ததால், அவா் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆதம்தீப் என்று பொது தொண்டு அறக்கட்டளை மனு தாக்கல் செய்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங் ஆஜராகி, ‘மம்தாவுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அட்டா்னி ஜெனரலின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அவரின் பதில் கிடைக்க வேண்டியிருப்பதால், மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து அந்த ஒப்புதல் நிச்சயம் கிடைக்குமா என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கேள்வி எழுப்பினாா். நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் விவகாரங்களை அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், அரசியல் சண்டைகளை நீதிமன்றத்தில் அல்லாமல் வெளியே வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவா் காட்டமாகத் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குடியரசு துணைத் தலைவருக்கான போட்டியில் நிதிஷ்குமார் கட்சி எம்.பி.?!

ஜகதீப் தன்கர் பதவி விலகிய நிலையில் அடுத்த குடியரசு துணைத் தலைவர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தல... மேலும் பார்க்க

38 நாள்களுக்குப் பின் கேரளத்தில் இருந்து விடைபெற்றது பிரிட்டன் போர் விமானம்!

திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட பிரிட்டன் போர் விமானம், சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு புறப்பட்டுச் சென்றது.பிரிட்டன் எஃப் - 35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்தத... மேலும் பார்க்க

2006 குண்டுவெடிப்பு! உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-ஆம் ஆண்டு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைக் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.நிகழாண்டு நடைபெறும் பி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்கள் தொடா்பாக 3... மேலும் பார்க்க

ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது மாநிலங்களவை! எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கியது!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமாவைத் தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு ... மேலும் பார்க்க