செய்திகள் :

2006 குண்டுவெடிப்பு! உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு!!

post image

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-ஆம் ஆண்டு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை 24ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவா்கள் அனைவரையும் விடுதலை செய்து மும்பை உயா் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் மும்பை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யவிருக்கிறது.

இந்த மனுவை வரும் 24ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுவை அவசரப் பட்டியலில் சேர்த்து விசாரிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனை ஏற்றுக்கொணட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு பட்டியலிட்டது.

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு!

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநி... மேலும் பார்க்க

கட்சிரோலி வளர்ச்சியைத் தடுக்க வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தும் நகர்ப்புற நக்சல்கள்: ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே இருந்துவரும் நகர்ப்புற நக்சல்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பி வருவதாக மாநில முதல்வர் தேவேந்தி ஃபட்னவீஸ் கூறினார்.கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு தி... மேலும் பார்க்க

ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஓப்போ கே 13எக்ஸ் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என ஓப்போ தெரிவித்துள்ளது.இதில், 6000mAh பேட்டரி திறன், 50... மேலும் பார்க்க

ஜீவனாம்சமாக ரூ.12 கோடி, பிஎம்டபிள்யு, மும்பை வீடு கேட்ட பெண்! பதில் கொடுத்த உச்ச நீதிமன்றம்

படித்த, திறமையான பெண்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காக, தாங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், ஜீவனாசம் என்ற பெயரில், கணவரிடமிருந்து இடைக்கால பராமரிப்புகளைக் கேட்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெர... மேலும் பார்க்க

ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவுக்கு ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளது: காங்கிரஸ்!

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை தி... மேலும் பார்க்க

காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டிய நிலையில், தீரத்துடன் பெண்ணை மீட்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது.இளம... மேலும் பார்க்க