”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எ...
கட்சிரோலி வளர்ச்சியைத் தடுக்க வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தும் நகர்ப்புற நக்சல்கள்: ஃபட்னவீஸ்
மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே இருந்துவரும் நகர்ப்புற நக்சல்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பி வருவதாக மாநில முதல்வர் தேவேந்தி ஃபட்னவீஸ் கூறினார்.
கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டிய அவர் கோன்சரியில் உள்ள லாயிட்ஸ் மெட்டல்ஸ் அன்ட் எனர்ஜி லிமிடெட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
கட்சிரோலியில் நக்சலிசம் குறைந்து வருகிறது. விரல்கள் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச் சில நக்சல்கள் மட்டுமே காடுகளில் எஞ்சியுள்ளனர். நக்சலைட்கள் வன்முறையைத் தவிர்த்து, பொதுவாழ்க்கையில் சேருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
துப்பாக்கி ஏந்திய நக்சலைட்டுகளின் எண்ணிக்கை குறைந்துவரும் அதேநேரத்தில் நகர்ப்புற நக்சலைட்கள் அதிகரித்து வருவதாக அவர் எச்சரித்தார். தவறான தகவல்களைப் பரப்பும் நகர்ப்புற நக்சலைட்டுகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கட்சிரோலி முன்னேறத் தொடங்கி எஃகு ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்ட மறுநாளே, பழங்குடியினர் கொல்லப்படுவதாகவும், அவர்களின் நிலங்களில் எஃகு ஆலை கட்டப்படுவதாகவும், காடுகள் பெரியளவில் வெட்டப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பிரசாரமும் பதிவுகளும் தொடங்கப்பட்டன.
அரசு வளர்ச்சிக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று இதுபோன்ற பிரச்சாரம் தொடங்கியது ஆச்சரியமாக இருப்பதாகவும், பொய் பிரசாரத்தில் ஈடுபடுவோரைக் கண்டறியக் காவல் துறையையும் கட்சிரோலி ஐஜி சந்தீப் பாட்டீலையும் அரசு கேட்டுக் கொண்டது என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகள் மூலம் அரசியலமைப்பிற்கு எதிராக மக்களைத் தூண்டுவதற்கு நகர்ப்புற நக்சல்கள் bவளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
நகர்ப்புற நக்சல்கள் போன்றே சிலர் வளர்ச்சியிலிருந்து மக்களை விலக்கி வைக்க வதந்திகளைப் பரப்புவதன் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார்.