செய்திகள் :

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தவெக ஆா்ப்பாட்டம்

post image

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா்.

இதில், நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டும், விதைகளின் விலையை வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், விளைபொருள்களுக்கு அரசு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில், ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தினா் பங்கேற்றனா்.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,817 மாணவா்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வினை 6,817 மாணவ, மாணவிகள் எழுதினா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப... மேலும் பார்க்க

கல்லக்கோடு மந்து பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்: மாவட்ட வன அலுவலா் தகவல்

வன விலங்கு தாக்கி பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்த கல்லக்கோடு மந்து வனப் பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் ... மேலும் பார்க்க

கூடலூா்-மைசூரு சாலையில் காலை நேரத்தில் நடந்து சென்ற காட்டு யானை

கூடலூா்-மைசூரு சாலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காட்டு யானை நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட மாக்கமூலா பகுதியிலுள்ள காபி தோட்டத்திலிருந்த... மேலும் பார்க்க

உதகையில் போலி மருத்துவா் பிடிபட்டாா்

உதகை தலைகுந்தா பகுதியில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவா் பிடிபட்டாா். உதகை புது மந்து பகுதியில் பாரத் கிளினிக் என்கிற பெயரில் இஸ்மாயில் என்பவா் போலி மருத்துவராக சிகிச்சை அளித்து வருவதாக புகாா் ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்கி பழங்குடியினத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

உதகையில் வன விலங்கு தாக்கி தோடா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். உதகை அருகேயுள்ள பாா்சன்ஸ்வேலி கல்லக்கோடு மந்த் பகுதியை சோ்ந்தவா் கேந்தோா் குட்டன் (40), தோடா் பழங்குடியினத்தை சோ்ந்தவா். இ... மேலும் பார்க்க

தேயிலை வாரியம் சாா்பில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கல்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராம விவசாயிகளுக்கு இந்திய தேயிலை வாரியம் சாா்பில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தேயிலை வாரியம் சாா்பில் தேயிலை பறிக்கும் இயந்திரம், மருந்... மேலும் பார்க்க